பேராபத்தை விளைவிக்கும் வாட்ஸ் அப் வதந்திகளை.. பார்வேடு பண்ணீறாதீங்க

பேராபத்தை விளைவிக்கும் வாட்ஸ் அப் வதந்திகளை.. பார்வேடு பண்ணீறாதீங்க.


சென்னை: கொரோனா வைரஸ் குறித்து பரவும் எந்த ஒரு வதந்திகளையும் மக்களே நம்பாதீர்கள். போலி செய்திகளையும் போலியான வீடியோக்களையும் அப்படியே நம்பாதீர்கள். ஏனெனில் முக்கியமான நேரம் இது. இந்த நேரத்தில் செய்யும் எந்த ஒரு விஷயமும் பயங்கரமான விளைவை ஏற்படுத்தி விடும்.


கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 12,17,724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் 65,832 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 3374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 77 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 86 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க வேண்டும் எனில் மக்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இன்னொரு விழிப்புணர்வாக பேஸ்புக், வாட்ஸ் அப்பில் வரும் எதையும் உண்மை அறியாமல் நம்பக்கூடாது,. அத்துடன் அதை பரப்ப கூடாது என்று உறுதிஏற்க வேண்டும்.ஏனெனில் இந்த வதந்தி பல ஆயிரம் மக்களை பேராபத்தில் தள்ளிவிடும்.


தேங்காயில் வெடிகுண்டு
உதாரணமாக உதய கீதம் படத்தில் நடிகர் கவுண்டமணி தேங்காய் வாங்க போகும் விலை அதிகமாக இருந்ததால் கடுப்பாவார். அத்துடன் இரண்டு தேங்காயில் பாம் இருப்பதாக சொல்லி அதிர்ச்சி அளிப்பார். அந்த வதந்தி ஊர் முழுக்க பரவி யாருமே தேங்காய் வாங்க மாட்டார்கள். தேங்காய் சும்மா கிடக்கும். அப்படித்தான் அண்மையில் யாரோ சில மடையர்கள் பரப்பிய வதந்தி கோழி பண்ணை தொழிலையே மொத்தமாக அழிக்க பார்த்தது.
கொரோனா வருமா
கோழி, முட்டையை சாப்பிட்டால் கொரோனா வரும் என்ற வதந்தியை நம்பிய மக்கள், சில வாரங்கள் கடை பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. அரசாங்கம், மருத்துவர்கள் என எவ்வளவோ விளக்கம் கொடுத்த பிறகே, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனாலும் நஷ்டம் என்பது பல கோடிகளை தாண்டும்- சிறுவதந்திகளை கண்ணை மூடிக்கொண்டு மக்கள் நம்பியதால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழக்க நேரிட்டது.


கொரோனா பரப்புபவர்கள்
இன்னொரு வதந்தி இப்போது வேகமாக பரப்பபட்டது. அதாவது குறிப்பிட்ட சமூகத்தினரே கொரோனா வைரஸை பரப்புவதாக கூறி போலியான வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள். இதை அப்படியே நம்பிய பலர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக மோசமாக வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள். இந்தியாவின் இறையான்மையை ஒட்டுமொத்தமாக சிதைக்கும் இந்த வதந்தியை தடுக்க மத்திய மாநில அரசுகள் போராடி வருகின்றன.
பழந்தமிழர் மருத்துவம்
இன்னொரு வதந்தி பழந்தமிழர் மருத்துவத்தில் கொரோனா மாத்திரை இருப்பதாக சிலர் போட்டோஷாப் செய்து பரப்பி விட்டார்கள். இதுவும் சில நாட்களாக உலா வந்தது. அதாவது கோரோசன மாத்திரை என்று இருந்ததை கொரோனா மாத்திரை என்று மாற்றி பரப்பி இருக்கிறார்கள். இதை யாராவது உண்மை என தயார் செய்தால் என்னாகும் நிலைமை.


பார்வேடு செய்வது
இதேபோல் கொரோனா வைரஸ், இதை செய்தால் உடனே சரியாகும், அதை செய்தால் உடனே சரியாகும். கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக இதை பயன்படுத்துகிறார்கள். இதை செய்கிறார்கள் என்று கணடபடி வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திட்டமிட்டு வதந்திகள் பரப்படுகிறது. இந்த வதந்திகளை அப்படியே நம்பும் அப்பாவி மக்கள் கொஞ்சமும் யோசிக்காமல் தெரிந்தவர்கள் எல்லாருக்கும் பார்வேர்டு செய்கிறார்கள். இது பலரது உயிருக்கும் உலைவைத்துவிடுகிறது.


திட்டமிட்டு பரப்புகிறார்கள்
மோசமான விஷயமாக பார்க்கப்படுவது என்றால் இப்போது ஒருவருக்கு கொரோனா இருக்கிறது என்று சொல்லும் வதந்திதான். வெளிநாடு சென்று வந்தவர்கள் அல்லது வெளி மாநிலம் சென்று வந்தவர்களை குறிவைத்து கொரோனா இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள். இதனால் அந்த குறிப்பிட்ட தெரு, ஊர் பகுதிகளில் மக்கள் ஒதுக்கிவைக்கப்படும் நிகழ்வுகள் நடக்கிறது. இதேபோல் மக்களும் அச்சத்துடனும் பீதியுடனும் வாழும் நிலை ஏற்படுகிறது. எனவே வாட்ஸ் ஆப் மற்றும பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக வலைதளத்திலும் கருத்து சொல்லும் பேர்வழிகளாக பொய் செய்திகளை பரப்பும் எவறையும் நம்பாதீர்கள். அது உங்களை மட்டுமல்ல உங்களை சுற்றியுள்ள சமூகத்தையே அழித்துவிடும். கொரோனாவைவிட கொரோனாவால் ஏற்பட்டுள்ள பீதியே மனிதர்களை கொன்று வருகிறது என்பதே எதார்த்தமான உண்மை.


" alt="" aria-hidden="true" />


Popular posts
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Image
ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Image
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Image
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இறைச்சி ,மீன் விலைகள் இரட்டிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ? பொதுமக்கள் கோரிக்கை
Image