தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இறைச்சி ,மீன் விலைகள் இரட்டிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ? பொதுமக்கள் கோரிக்கை
கொரனோ வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இறைச்சி கடைகள் போடப்பட்டு மக்களின் சூழ்நிலையினை புரிந்துக் கொண்டு வியாபாரிகள் ஆடு மற்றும் மீன் இறைச்சிகளை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.
குறிப்பாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பல்வேறு தெருக்களில் வைத்து ஆடு இறைச்சி வியாபாரம் செய்து வருகின்றனர்,
இது போன்ற வியாபாரங்கள் செய்யும் வருபவர்கள் மக்களிடம் எப்போதும் விற்பனை செய்வதை விட இரண்டு மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
அதேபோல் பெரியகுளம் பகுதியில் உள்ள கண்மாய்களில் பிடித்து விற்கப்படும் மீன்கள் இரண்டு மடங்கு அதிகமாக விற்கப்படுகின்றன .
தெருக்களில் கூட வந்து விற்பனை செய்யக்கூடிய மட்டன் மீன் இறைச்சிகள் இரண்டு மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு மாவட்ட ஆட்சியாளர் மற்றும் வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை இடுகிறார்கள் இவன் :- A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்.
" alt="" aria-hidden="true" />